திருநெல்வேலி: சென்னையில் இருந்து இயங்கும் செய்தி சேனல் ஒன்றின் செய்தியாளரைத் தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னையில் இருந்து இயங்கும் தமிழ் செய்தி சேனல் ஒன்றின் நெல்லைப் பகுதி செய்தியாளர் சுடலைக்குமார். இவரது கேமரா லென்ஸ் தொலைந்து விட்டது. இது தொடர்பாக புகார் கொடுக்க பாளை. குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு அவர் சென்றார். அங்கே இன்ஸ்பெக்டர் கலையரசன் புகாரை பதிவு செய்ய மறுத்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் செதியாளரை, இன்ஸ்பெக்டர் அவதூறாகப் பேசியுள்ளார். தொடர்ந்து அவரது முகத்தில் ஒரு குத்து விட்டுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த செய்தியாளர் சுடலைக்குமார் நிலைகுலைந்து விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் சக செய்தியாள நண்பர்களுக்கு தகவல் அளித்தான் அதன்படி அங்கே விரைந்த சக நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவல் துணை ஆணையர் சுரேஷ்குமாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஒருவர் செய்தியாளரைத் தாக்கிய சம்பவம், நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் தொலைக்காட்சி செய்தியாளரைத் தாக்கிய இன்ஸ்பெக்டரால் பரபரப்பு
Popular Categories



