December 6, 2025, 3:10 AM
24.9 C
Chennai

கொரோனாவிற்கு இறந்ததாக கூறி குழந்தையை விற்ற கும்பல்!

baby
baby

மதுரையில் ஒரு வயது பெண் குழந்தையை விற்று விட்டு அந்த குழந்தை கொரோனாவால் இறந்ததாக நம்ப வைத்து அவரது தாயை இறுதி சடங்குகள் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

போலி ஆவணங்கள் தயாரித்து இதயம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சட்டவிரோதமாக விற்கப்பட்டதா என விசாரணை நடக்கிறது.

mother - 2025

உரிமையாளர் சிவக்குமார், பொறுப்பாளர் மதர்ஷா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை நகர் ஆயுதப்படை மைதான வளாகத்தில் மாநகராட்சி மகப்பேறு மையம் இருந்த கட்டடத்தில் சில மாதங்களாக இந்த இல்லம் செயல்பட்டு வருகிறது.

அரசின் அங்கீகாரம் பெறாமல் ஜெய்ஹிந்த்புரம் சிவக்குமார் நடத்தி வருகிறார். மதுரையில் போலீசார், சமூக ஆர்வலர்களால் மீட்கப்படும் ஆதரவற்றோர் தற்காலிகமாக இந்த இல்லத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

தற்போது 38 ஆண்கள், 35 பெண்கள், ஒரு வயதிற்கு மேற்பட்ட 2 ஆண் உட்பட 7 குழந்தைகள் உள்ளனர். வெளியே தெரிந்தது எப்படி சில நாட்களுக்கு முன் கணவரை இழந்து சிரமப்பட்ட மதுரை மாவட்டம் மேலுார் சேக்கிப்பட்டி ஐஸ்வர்யா, அவரது 8 வயது மகள், 4 வயது மகன், ஒரு வயது மகளை இந்த இல்லத்தில் சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் சேர்த்தார்.

Sivakumar - 2025

கடந்த 11ம் தேதி 1 வயது குழந்தைக்கு உடல்நலம் பாதித்ததாக கூறி இல்ல பொறுப்பாளர்கள் வெளியே எடுத்துச்சென்றனர்.

இதுவரை குழந்தை என்ன ஆனதென்று தெரியவில்லை.நேற்றுமுன்தினம் ஐஸ்வர்யா கேட்டபோது, ‘கொரோனாவால் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை இறந்துவிட்டது. புதைத்து விட்டோம்’ என்று தெரிவித்து, தத்தனேரி சுடுகாட்டிற்கு அழைத்துச்சென்று இறுதி சடங்கும் செய்ய வைத்தனர்.

இதையறிந்த அசாருதீன், ‘மதுரை மாவட்டத்தில் கொரோனாவுக்கு முதன்முறையாக பச்சிளம் குழந்தை பலி’ என்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனை, சுகாதாரத்துறையிடம் விசாரித்தபோது குழந்தை இறந்ததாக தகவல் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு ஆதரவற்றோர் இல்லத்தில் சுகாதார துறை, மாநகராட்சி, போலீசார், சமூகநலத்துறை, குழந்தைகள் நலக்குழுமம், சைல்டு லைன் அமைப்பினர் விசாரித்தனர்.

madhurai - 2025

நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜூன் 11ல் சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ரசீது, நேற்று முன்தினம் தத்தனேரியில் குழந்தையை புதைத்ததற்கான ரசீதை ஊழியர்கள் காண்பித்தனர்.

அதை ஆய்வு செய்தபோது போலி எனத்தெரிந்தது. இதற்கிடையே இல்ல உரிமையாளர் சிவக்குமார், பொறுப்பாளர் மதர்ஷா தலைமறைவாயினர்.

‘நேற்று காலை மற்றொரு பொறுப்பாளர் கலைவாணியுடன் அதிகாரிகள் தத்தனேரி சுடுகாட்டிற்கு சென்று குழந்தை உடலை தோண்டி எடுக்க முயன்றனர். அப்போது மாநகராட்சி நகர் நல அலுவலர் குமரகுருபரன் சந்தேகப்பட்டு பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, அங்கு வேறு ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருப்பது தெரிந்தது.

இதுகுறித்து தல்லாகுளம் போலீசில் தத்தனேரி சுகாதார ஆய்வாளர், நரிமேடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் புகார் செய்தனர்.

madhurai 1 - 2025

இதற்கிடையே நேற்று மதியம் இல்லத்தில் இருந்து கம்ப்யூட்டர் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்து ஆய்வுக்காக எடுத்துச் செய்தனர்.

அதிகாரிகள் கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், குழந்தையை இறந்ததாக கணக்கு காட்டி சட்டவிரோதமாக விற்பனை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஆதரவற்றோருக்கு உதவுவது போல் சிவக்குமார் நடித்து அதிகாரிகளை நம்ப வைத்து ஆங்காங்கே இல்லங்களை நடத்தி வந்துள்ளார். இதுவரை இந்த இல்லத்தில் 3 குழந்தைகளை காணவில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் உடலை புதைத்ததாக கூறி பரிசுத்தொகையுடன்கூடிய அரசின் விருதை இல்ல பொறுப்பாளர்கள் பெற்றுள்ளனர்.

இதுவும் மோசடி செய்து பெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இல்லத்தில் இருந்தவர்கள் வேறு இல்லங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர், என்றனர்.

நகர் நல அலுவலர் குமரகுருபரன் கூறியதாவது: குழந்தைக்கு காய்ச்சல் இருந்துள்ளது.

அதற்கு சிகிச்சை அளிக்காமல் 2 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு செல்வதாக கூறி காரில் மதர்ஷாவும், சிவக்குமாரும் அழைத்துச் சென்றுள்ளார். இதுவரை குழந்தை நிலை தெரியவில்லை. தவிர, குழந்தையை புதைத்ததாக கூறிய இடத்தில் தாயார் ஐஸ்வர்யா சடங்கு செய்வதற்கான ஏற்பாட்டை மதர்ஷாதான் முன்னின்று செய்திருக்கிறார்.

அவரும், சிவக்குமாரும் கிடைத்தால் தான் முழுவிபரமும் தெரியவரும், என்றார். இந்நிலையில் ஐஸ்வர்யாவின் குழந்தை மற்றும் ஒரு குழந்தை மீட்கப்பட்டுவிட்டதாக நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories