மின்கம்பத்தை அகற்ற லஞ்சம்! உதவி இன்ஜினியர் கைது!

Published:

suresh babhu - 2026

மின் கம்பத்தை அகற்ற, 23 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மின் வாரிய உதவி இன்ஜி., கைது செய்யப்பட்டார்.

கோவை, ஆனைகட்டியை சேர்ந்தவர் ஜெயந்தி, 45. இவருக்கு சொந்தமான இடத்தின் அருகே இடையூறாகயிருந்த மின் கம்பத்தை சற்று நகர்த்தி வைக்க சின்னதடாகம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

மின்வாரிய உதவி இன்ஜி., சுரேஷ்பாபு, 49, அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையுடன் சேர்த்து, 80 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

இறுதியாக, 23 ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்துடன், 55 ஆயிரம் கேட்டார். இதற்கு சம்மதம் தெரிவித்த ஜெயந்தி, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் அளித்த, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளுடன் ஜெயந்தி; சின்ன தடாகம் மின்வாரியம் உதவி இன்ஜி., யிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.

அப்போது, லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தலைமையிலான போலீசார் சுரேஷ்பாபுவை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

இதன்பின், பன்னிமடையிலுள்ள அவரது வீட் டில் நேற்று நள்ளிரவு வரை சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் தங்களிடம் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து, புகார் தெரிவிக்ககதவு எண்:4, ராமசாமி நகர், தீயணைப்பு நிலையம் அருகே, கவுண்டம்பாளையம், கோவை–641030 என்ற முகவரியில் தெரிவிக்கலாம்.

மேலும், 0422-2449550 என்ற எண்ணிலும், 95977 87550 என்ற வாட்ஸ்ஆப் எண் மூலமும், dspvac coimbatore@gmail.com என்ற இமெயில் மூலமும் தெரிவிக்கலாம் என, கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்.பி., திவ்யா தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img