ஆலயங்களை அழிக்கும் துறை இது: ஹெச்.ராஜா ஆவேசம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

காஞ்சிபுரம்:
இந்து சமய அறநிலையத்துறை, ஆலயங்களை அழிக்கும் துறையாக உள்ளது என்று பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தை அடுத்த மதுராந்தகம் அச்சிறுப்பாக்கத்தில் பாஜக., தேசிய செயலர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்து சமய அறநிலையத்துறையானது, இந்து கோவில்களை அழிக்கும் துறையாக உள்ளது என குற்றம்சாட்டினார். கழக அரசுகள் கோவில்களை முறையாக நிர்வகிக்கவில்லை என்று கூறிய ஹெச்.ராஜா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கவலை தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.