இந்தியாவில் முதல் முறையாக கோடை காலம் தொடங்கும் முன்பே ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தண்ணீர் பந்தல் அமைத்து ரயில் பயணிகளுக்கு நீர் மோர் வழங்கினர்.
கோடை காலம் தொடங்கி விட்டால் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் நீர்மோர், தண்ணீர் பந்தல்கள் அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் தாகத்தை போக்கி வந்தனர்.
இதே போல நெல்லை மாவட்டம்,செங்கோட்டை ரயில் நிலையத்தில் இந்தியாவில் முதல் முறையாக தெற்கு இரயிவே சார்பில்முதல் முறையாக இரயில் நிலைய நுழைவு வாயில் முன்பு கோடை காலம் தொடங்கும் முன்பே ரயில் பயணிகளின் குடிநீர் தாகத்தை போக்க ரயில்வே பாதுகாப்பு படையினர் தண்ணீர் பந்தல் அமைத்தனர்.
செங்கோட்டை ரயில் நிலைய அதிகாரி சுகுமார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஞான ஆனந்த் ஆகியோர் ரயில் பயணிகளுக்கு நீர் மோர் வழங்கி விழாவை தொடங்கி வைத்தனர்.
இதில் ஏராளமான ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் முதல் முறையாக செங்கோட்டை ரயில் நிலையத்தில் தான் ரயில் பயணிகளுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முயற்சியை பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் வெகுவாக பாராட்டினர்.



