
நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை மார்கழி அமாவாசை திதி மூலம் நட்சத்திரத்தில் அவதரித்த ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில் ராஜபாளையம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறுகிறது.
ராஜபாளையம் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட ஆதி வழிவிடும் விநாயகர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது அஷ்ட வரத ஆஞ்சநேயருக்கு அதிகாலை கும்ப ஜெபம் கணபதி ஹோமம் ஆஞ்சநேயர் ஹோமம் அபிஷேகம் தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது . பின்னர் வெள்ளி கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மதியம் 3 மணியளவில் கும்ப ஜபம் அஷ்டவரத ஆஞ்சநேயருக்கு 108 திவ்ய ஹோமம் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார தீப ஆராதனை வழிபாடு நடைபெற்றது. ராஜபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டவரத ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.பஜனை கீர்த்தனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு மூன்று வேளையும் அன்னதானம் சிறப்பாக நடந்தது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் தலைமையில் நற்பணி மன்ற நண்பர்கள் சிறப்பாக செய்திருந்தனர்
மேலும் இக் கோயில் ஆதி வழி விடு விநாயகருக்கு சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது.மஹா அபிஷேகம் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து தீபாராதனை வழிபாடு நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர் பக்தர்களுக்கு நாள் முழுவதும் விநாயகர் பிரசாதம் வழங்கப்பட்டது.

ராஜபாளையம் அருகே சாஸ்தா கோவில் வனப்பகுதி செல்லும் வழியில் உள்ள கல்லணை ஆஞ்சநேயருக்கு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலமாக பக்தி பரவசத்துடன் நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சை கள் செலுத்தி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சாஸ்தாகோவில் அருகே கல்லணை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் இளநீர அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் தீபாராதனை வழிபாடு நடைபெற்றது துளசி மாலை சந்தனக்காப்பு அலங்காரம் வெள்ளி கவசம் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு
அருள்பாவித்தார்.

ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில். ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா. வெள்ளி கிழமை, விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது, பக்த கோடிகளும் .பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ராம பக்த அனுமன் திருவருள் பெற்று மகிழ்ந்தனர்.
ராஜபாளையம் சிங்கராஜா கோட்டை ராஜுக்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி விழா. வெள்ளி கிழமை, கொண்டாடப்பட்டது.ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடை பெற்றது, பக்த கோடிகளும் .பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ ராம பக்த அனுமன் திருவருள் பெற்று மகிழ்ந்தனர்.





