விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மயூராநாத சுவாமி கோயிலில் நிதி முறைகேட்டில் ஈடுபட்ட பெண் கணக்கர் மீது வழக்குப் பதிவுசெய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு பத்தியப்பட்ட இந்த கோயிலில் செயல் அலுவலராக ராஜா செயல்பட்டு வருக்கிறார். இங்கு தட்டச்சராக பணியாற்றும் சாந்தி என்பவர் . கூடுதலாக கணக்கர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சந்தோஷ்குமார் என்பவர் வாடகை செலுத்திய ரசீது அடிக்கட்டு புத்தகத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த செயல் அலுவலர் ராஜா குத்தகைதாரர் சந்தோஷ் குமாரிடம் விசாரித்ததில் ரூ.1 லட்சம் வாடகை செலுத்தியது தெரிய வந்தது. இதுகுறித்து உயர் அலுவலர்களுக்கு அறிக்கை அளித்தார்.
மேலும் கணக்கர் சாந்தி
முக்கிய நாட்களில் நடைபெறும் திருவிளக்கு பூஜை உள்ளிட்ட விழாக்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பக்தர்கள் வழங்கும் காணிக்கைகளுக்கு உரிய ரசீது வழங்காதது மேலும் அரசால் வழங்கப்படும் அன்னதானத்திற்கு பொருள் வாங்குவதில் முறைகேடு பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் பொருட்களை அன்னதானத்துக்கு வழங்கிவிட்டு கணக்கு எழுதி அதில் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றசாட்டு எழுந்தது. இதையடுத்து கோயில் கணக்கு விபரங்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜா தணிக்கை செய்ததில் முறைகேடு நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி கணக்கர் சாந்தியை இணை ஆணையர் செல்லத்துரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோயில் இடத்திற்கு பெற்ற வாடகை கட்டணத்தை குறைத்து காட்டி முறைகேட்டில் ஈடுபட்டதாக கணக்கர் சாந்தி மீது செயல் அலுவலர் ராஜா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரித்து இராஜபாளையம் வடக்கு போலீசார் மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் சாந்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






