December 6, 2025, 4:48 AM
24.9 C
Chennai

எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும்: ரஜினி கலக்கல் பேச்சு! இணையத்தில் குவியும் பாராட்டு!

சென்னை:
எம்.ஜி.ஆர். கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும், ஜெயலலிதா, கருணாநிதியின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன் என்று பேசினார் ரஜினி காந்த். ஆன்மிக அரசியலை முன்னெடுத்துள்ள ரஜினி, வெளிப்படையான ஆன்மிகவாதியான ஜெயலலிதா, திரை மறைவில் ஆன்மிகவாதியான எம்.ஜி.ஆர்., உள்ளூர ஆன்மிகவாதியான கருணாநிதி ஆகிய மூவரையும் முன்னிலைப் படுத்திப் பேசியுள்ளார்.

திராவிட அரசியலை மையப் படுத்திய தமிழக அரசியல் களத்தில் ஈ.வே.ரா, பெரியார், சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி என மூன்று பேரின் படங்களைப் போட்டு அரசியல் நடத்துவார்கள். அது திராவிட இயக்க அரசியல் எனப்படுகிறது. இப்போது ரஜினி மாற்று அரசியலை முன்னெடுத்துள்ளதால், தன் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆன்மிக அரசியல் என்று பெயர் சூட்டியுள்ளார். அதன் மூன்று தலைவர்களாக ரஜினி கோடிட்டுக் காட்டியிருப்பவர்கள், எம்ஜிஆர்., ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய மூவர்.

IMG 20180306 WA0003 - 2025

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், எம்ஜிஆர் சிலையைத் திறந்து வைத்துப்பேசினார். அவரது பேச்சு, உள்ளத்தின் அடி ஆழத்தில் இருந்து வந்ததாகவே பலரும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், அவர் பேசிய வெளிப்படையான பேச்சு தான். முக்கால் நூற்றாண்டு தமிழக அரசியலை தன் முக்கால் மணி நேரப் பேச்சில் புரட்டிப் போட்டார் ரஜினிகாந்த்! மக்கள் தலைவனின் பேச்சு இப்படித்தான்… நேரடியாக இருக்கும்.. ஊழல், சுயநல, இனவெறியர்களுக்கு பேரிடியாக இருக்கும் என்று கருத்துதெரிவித்து வருகின்றனர் சமூக இணையதளங்களில்!

குறிப்பாக, நானே கட்சி தொடங்கினாலும், அரசியலில் மாணவர்கள் வர வேண்டாம் என்றும், பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது. அரசியல் பாதை பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை எனக்கும் தெரியும் என்றும் அவர் வெளிப்படையாகப் பேசியதுதான்!

rajini mgr stature - 2025

தனது அரசியல் பாதையின் ஆசானாக அவர் குறிப்பிடுவது துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியை! அடுத்து தனது அரசியல் அரிச்சுவடி குறித்து ரஜினி கூறியது… கருணாநிதி, மூப்பனார் போன்றவர்களுடன் பழகி தான் அரசியல் கற்றுக்கொண்டேன். என்னை யாரும் ரத்தினக் கம்பளம் விரித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பவில்லை. ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். பொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். அரசியலுக்கு வந்துள்ள என்னை வாழ்த்த வேண்டிய அவசியமில்லை. ஏன் ஏளனம் செய்கிறீர்கள்? கட்சியை அறிவிக்கும் முன்பே கொள்கை என்ன என்று கேட்பது, பெண் பார்க்க செல்லும் முன் திருமண பத்திரிகை எங்கே என்று கேட்பதுபோல் உள்ளது…. என்றார்.

rajini banner - 2025

முக்கால் மணி நேர ரஜினியின் பேச்சில் தெறிக்க விட்ட சில நறுக்குகள்…

தமிழகத்தில் தலைவனுக்கும் தலைமைக்கும் வெற்றிடம் உள்ளது. தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே! இந்தியாவிலேயே கட்சியை கட்டுப்பாட்டுடன், நல்ல ஆளுமையுடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.

13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சியை கட்டிக்காத்தவர் திமுக தலைவர் கருணாநிதி. அவர் போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன்.

என்னால் எம்ஜிஆராக முடியாது. எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும். இனிமேல்தான் ஆன்மிக அரசியலை பார்க்கப் போகிறீர்கள். தூய்மைதான் ஆன்மிக அரசியல். நம் பக்கம் ஆண்டவனே இருக்கிறான்.

எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவைக் கூற விரும்பினேன். ஆனால் காலம் அமையவில்லை. இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது. நான் இன்று வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம் எம்ஜிஆர்தான்.

எம்ஜிஆர் போன்ற ஒரு தலைவர் இனி உருவாக முடியாது; எம்ஜிஆர் ஒரு தெய்வப் பிறவி. எம்ஜிஆரை நான் முதன்முதலாகப் பார்த்தபோது சூரியன் போல இருப்பவருக்கு யார் சந்திரன் என்று பெயர் வைத்தார்கள் என்று யோசித்தேன்.

– இவ்வாறு பேசிய ரஜினி, மாணவ சமூகத்துக்கு சில அறிவுரைகளையும் கூறினார்.

தமிழ் பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால் தான் தமிழ் வளரும். அப்துல் கலாம், சுந்தர் பிச்சையால் தமிழுக்கும், தமிழனுக்கும் பெருமை. மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் முக்கியம். படிக்கும் காலத்தில் அரசியலுக்கு வரவேண்டாம். நானே ஒரு கட்சி ஆரம்பித்தால் கூட யாரும் வர வேண்டாம். ஆனால் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று பேசினார். அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் இப்போது விவாதப் பொருளாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories