நிறுத்த மாட்டேன்… நேர்படப் பேசுதலை… கவிதை கஸ்தூரி!

உள்ளூர் செய்திகள் சினி நியூஸ் சென்னை

சென்னை:

நிறுத்த மாட்டேன், நேர்படப்பேசுதலை நிறுத்த மாட்டேன் என்று உறுதிபடக் கூறி கவிதை எழுதியுள்ளார் கஸ்தூரி.

தன் மனதில் பட்டதை தைரியமாகவும், வெளிப்படையாகவும் பேசக்கூடியவர் நடிகை  கஸ்தூரி. அண்மைக் காலமாக ட்விட்டரில் ராஜாங்கம் நடத்தி வரும் கஸ்தூரி, தான் நினைத்த கருத்துகளை வெளிப்படையாகப் பதிவிட்டு வருகிறார். அதற்காக எதிர்வினைகள் அவரைத் தாக்கினாலும், மனம் தளராமல் மல்லுக்கு நின்று போராடி வருகிறார்.

இந்நிலையில், ‘மிரட்டல் விடுத்தாலும், சிறையில் அடைத்தாலும் நேர்படப் பேசுதல் நிறுத்த மாட்டேன்’ என ஒரு கவிதையை(?) இன்று பதிவிட்டுள்ளார் கஸ்தூரி. அந்தக் கவிதை இதோ…

மிரட்டல் விடுத்தாலும்

சிறையில் அடைத்தாலும்

நேர்பட பேசுதல் நிறுத்த மாட்டேன்

துச்சம்மென நினைத்தெம்மை

அச்சுறுத்தல் செய்வோரை

போர் புரிந்தோட்டவும் தயங்கமாட்டேன்

மறந்துபோன வலிகளையே

மறுபடி மறுபடி விதைப்பவர்கள்

துரத்தி வந்தால் துடிக்கும் ஜாதியல்ல

துணித்து திரும்பி அடிக்கும் நீதியெமது!

கஸ்தூரியின் இந்தக் கவிதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.