
சென்னை: சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல், கார்த்தி சிதம்பரம் இவ்வளவு தவறுகள் செய்திருக்க முடியாது என்ற தனது ஐயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா. மேலும், கார்த்திக்கிடம் முழு விசாரணை நடத்தப்பட்ட பின் ‘சீனியர்’ சிதம்பரம் கைதாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மகன் கார்த்திக்கிற்கு மீண்டும் 3 நாட்கள் சி.பி.ஐ காவல் நீட்டிப்பு. முழு விசாரணைக்குப் பின் சீனியர் சிதம்பரம் கைதாகலாம். கார்த்தி சிதம்பரம் செய்த தவறுகள் சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் மகன் கார்த்திக்கிற்கு மீண்டும் 3 நாட்கள் சி.பி.ஐ காவல் நீட்டிப்பு. முழு விசாரணைக்குப் பின் சீனியர் சிதம்பரம் கைதாகலாம். கார்த்தி சிதம்பரம் செய்த தவறுகள் சிதம்பரத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது
— H Raja (@HRajaBJP) March 9, 2018
ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் சிபிஐயால் விசாரிக்கப் பட்டு வருகிறார். தன் தந்தை கொடுத்த தைரியத்தில், வாய் திறக்காமல் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால், சிபிஐ உண்மை கண்டறியும் சோதனைக்கு கார்த்திக்கை உட்படுத்த பரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத் தக்கது.



