சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று இரவு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயனமுறையில் பழுக்க வைக்கப்பட்ட 5 டன் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோயம்பேடு சந்தையில் கால்சியம் கார்பைடு என்ற ரசாயனங்கல் மூலம் பழங்கள் செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து 25 போலீசார் உள்பட 75 அதிகாரிகள் நேற்று இரவு கோயம்பேடு சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ரசாயன முறையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சப்போட்டா, மாம்பழம் மற்றும் எத்திலீன் என்ற மருந்து தெளிக்கப்பட்ட வாழைப்பழம் போன்றவை 5 டன் அளவில் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



