நீங்கள் சுக்கிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். அவருக்கு அசுரகுரு என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆனால் அசுரக்குணம் அறவே இல்லாதவர்கள். கலாரசிகர்கள். எதை செய்தாலும் அவசரமில்லாமல், ஆழ்ந்து யோசித்து அதன் பின்னரே செயல்படுத்தும் குணமுள்ளவர்கள். பழிபாவத்திற்கு அஞ்சியவர்கள். மனதறிந்து அடுத்தவருக்கு எந்த பாவமும் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்பது உங்கள் சிந்தனை. சனிபகவான் உச்சமாகும் ராசி துலாம். சனிக்கு தர்மத்தின் தலைவன் என்று இன்னொறு பெயர் உண்டு. அதனால்தானோ என்னவோ அதே குணம் உங்களிடமும் இருக்கும். தான்வாழ பிறரை கெடுக்காதே என்பது உங்கள் வாழ்க்கை சிந்தாந்தம். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவர்கள். அவனின்றி அணுவும் அசையாது என்று திடமாக நம்புகிறவர்கள். சரி… தமிழ் புத்தாண்டு வருகிறது. இந்த புத்தாண்டில் நீங்கள் பெறப்போகும் நற்பலன்கள் என்ன? யோக பாக்கியங்கள் என்ன? என்பதைப் பார்க்கும் முன் தற்போதைய நிலவரம் என்ன என்பதைப் சுருக்கமாக பார்ப்போம்.



