
சென்னை:
திருவள்ளூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி அமைப்பாளர் சரத்குமார் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியுள்ளனர்.
திருவள்ளூர் கிளாம்பாக்கத்தில் உள்ளது, இந்து மக்கள் கட்சி மாவட்ட அமைப்புத் தலைவர் சரத்குமாரின் இல்லம். இங்கே நேற்று இரவு வந்த மர்ம நபர்கள் திடீரென வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து அளிக்கப் பட்ட புகாரின் பேரில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



