தேசியக் கொடியை எரித்து முகநூலில் பகிர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப் பட்டிருக்கிறார்.
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசியராக வேலை செய்தவர் பிரபுபதி. இவர், தனது முகநூல் பக்கத்தில், மத்திய அரசைக் கண்டித்து, தேசியக் கொடியை எரித்து, அதை புகைப்படம், வீடியோ எடுத்து பதிவு செய்திருந்தார்.
காவிரி விவகாரம் தமிழகத்தில் சூட்டைக் கிளப்பியுள்ள நிலையில், அவரது செயல் பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. மத்திய அரசை விமர்சித்து, தேசியக் கொடியை எரித்து அவர் பதிவிட்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இது குறித்து, அரசின் கவனத்துக்குக் கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்குமாறு முகநூல் பயனாளிகள் பலரே கோரிக்கை விடுத்தனர். இதை அடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தேசியக் கொடியை எரித்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பிரபுபதியை போலீஸார் கைது செய்தனர்.