சென்னை : தமிழக மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறது திமுக., என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக திமுக நாடகமாடுகிறது. கர்நாடகாவில் சித்தராமய்யா ஆட்சியை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே திமுக இங்கு போராட்டம் நடத்தி வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் திமுக, தண்ணீர் தராத கர்நாடகாவில் ஆளும் காங்., அரசைக் கேள்வி கேட்காதது ஏன்? காங்கிரஸையும் விமர்சிக்க வேண்டியது தானே? என்று கேள்வி எழுப்பினார்.




