ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம்; 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சேப்பாக்கம் மைதானத்திற்குள் செருப்பு வீசி, எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள்
சேப்பாக்கம் மைதானத்தில் காவிரி தொடர்பாக கோஷமிட்ட மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அண்ணாசாலை மற்றும் சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதநேய ஜனநாயக கட்சியினர் 125 பேரும், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 75 பேரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 63, ரஜினி மக்கள் மன்றத்தினர் 53, தமிழர் எழுச்சி இயக்கம் 32 உட்பட 780 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் காலணி வீச்சு நடத்தினர். ரசிகர்கள் காலணி, கொடிகள் வீசியதால் பதற்றம் நிலவியது. 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் கருப்புக் கொடி காட்டிய விவகாரத்தில் 50 பேர் கைதுசெய்யப்பட்டனர். 18-வது ஓவரில் கருப்புக் கொடி காட்டி முழக்கம் செய்த நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைதாகினர்.
சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான தடியடி கண்டனத்துக்குரியது,
அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமானை கைது செய்தது கண்டனத்துக்குரியது என்று டிடிவி தினகரன்
கூறியுள்ளார்
ஐபிஎல் போட்டிக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.
மக்களின் உணர்வுகளை எந்த அளவிற்கு அரசுகள் அவமதித்துள்ளன என்பதை காட்டுகிறது, காவிரி பிரச்னையைவிட கிரிக்கெட் போட்டியை நடத்துவது அதிமுக அரசுக்கு முக்கியமாகிவிட்டது என்று கூறினார் முக. ஸ்டாலின்