ஆளுநரின் செயல்பாடுகள் கவனம் கொள்ளுமா மத்திய அரசு ? ஜி.கே.வாசன்

gk vasan9 600 10 1491821923 - 2026

தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் தொடர்ந்து சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளதை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் , தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் .வலியுறுத்தல் இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று  வெளியிட்டுள்ள  அறிக்கையில், ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தின் தொடர் செயல்பாடுகளை, நடவடிக்கைகளை கடந்த சில மாதங்களாகவே எதிர்கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சிப்பதும், எதிர்ப்பதும் மட்டுமல்ல பல்வேறு நிலைகளிலே ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் அதிருப்தியை தெரிவிப்பதும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது.
இருப்பினும் ஆளுநரின் செயல்பாடுகள் சம்பந்தமாக சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே ஆளுநரின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் சந்தேகங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.
குறிப்பாக மாவட்டங்களுக்கு ஆய்வுக்காக சென்றதிலும், துணை வேந்தர் லஞ்சம் பெற்றது தொடர்பான நடவடிக்கையிலும், துணை வேந்தரை நியமனம் செய்ததிலும், அதனைத் தொடர்ந்து இப்போது அருப்புக்கோட்டை துணை பேராசிரியை நிர்மலா தேவியின் குற்றச்செயல் மீதான அவசர நடவடிக்கையாக ஒரு நபர் விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டதிலும், இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையும் ஆளுநருக்கு எதிராகவே அமைந்துள்ளது.
இவ்வாறு ஆளுநர் தெளிவற்ற, அவசரமான தனது தொடர் செயல்பாட்டால் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டிருக்கிறார்கள். இவை எல்லாம் பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நல்ல நிகழ்வாக அமையவில்லை.
மேலும் ஆளுநரின் நடவடிக்கைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவோ, எதிர்கட்சிகளுக்கு எதிராகவோ அமைந்துவிடாமல் பொது மக்கள் நலன் காக்கும் விதத்திலும், மாநில முனேற்றத்திற்கு உதவிடும் வகையிலும் அமைய வேண்டும். எனவே ஆளுநரின் தொடர் செயல்பாட்டின் காரணமாக எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகளை மத்திய அரசு முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories