திக் திக் திகிலில் தினகரன்..! அதுவும் இதுபோல் ஆனால்..? ஆதரவாக வந்த அந்த 18 பேர் கதி..?

ttv dinakaran - 2026

சென்னை: வெள்ளிக்கிழமை இன்று தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான ஒரு சூழ்நிலையே நிலவியது. கொறடா உத்தரவுக்கு மாறாக, எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கு கோரியபோது எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ்., உள்ளிட்ட்ட 11 பேரை தக்தி நீக்கக் கோரும் வழக்கில், அவைத்தலைவர் என்ன முடிவு செய்தாரோ அதுவே சரி என்று கூறி, அவைத்தலைவர் முடிவில் தாங்கள் தலையிட முடியாது என்ற ஒரு வார்த்தையை தங்கள் தீர்ப்பில் அடிக்கோடிட்டு வழங்கியிருக்கின்றனர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்.

இந்நிலையில், தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கப்பட்ட வழக்கிலும் இது போன்ற ஒரு நிலைதான் இருக்கும் என்று இப்போதே பலரும் எதிர்பார்க்கின்றனர். காரணம், அதிலும் அவைத்தலைவர் தனபால்தான் இத்தகைய ஒரு முடிவை எடுத்தார். வழக்கு பதியப் பட்டதும், சட்டப் பேரவைத் தலைவர் தனபால் நடவடிக்கையை எதிர்த்துதான் என்பதால், இந்த வழக்கில் இப்போதே சில முடிவுகள் தெரியவருவதாக அதிமுக., தரப்பில் கூறுகின்றனர்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

Madras High Court in Chennai - 2026

தினகரன் தரப்பு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விவகாரத்திலும் தீர்ப்பு எப்படி இருக்கும் என தெளிவு, இன்றைய 11 பேர் விவகாரத்தில் புரிவதால் தினகரன் தரப்பில் பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப் படுகிறது. இதுவரையிலும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் என்று நம்பிக் கொண்டிருந்த தினகரன் தரப்புக்கு, இன்று வந்த தீர்ப்பு சற்று கிலியைத்தான் கொடுத்திருக்கும்.

11 சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து இன்று காலை முதல் தமிழகத்தில் பரபரப்பு நிலவியது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அந்த பரபரப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதுபோல், இத்தனை காலம் நீடித்து வரும் ஒரு பரபரப்புக்கும் நாளை முற்றுப் புள்ளி வைக்கப் படும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு சனிக்கிழமை வரும் என்று கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி அரசின் மீது நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்துக்கு எதிராக தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்கு அளித்தனர்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

dhanapal speaker - 2026

இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய கோரி சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த மனு பரிசீலிக்கப் படவில்லை. இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக கொறடா சக்கரபாணி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு விசாரணை நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் களாக நீடிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

சபாநாயகரின் நிர்வாக முடிவில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பில், இந்த வாசகம்தான் முக்கியமானதாகக் கருதப் படுகிறது.

முன்னதாக, இன்று தேவராஜன் என்பவர், 18 பேர் தகுதி நீக்கம் குறித்த வழக்கில் தீர்ப்பு கொடுத்திவிட்டு 11 பேர் வழக்கில் தீர்ப்பு கொடுக்கலாமென்று கூறினார். அவரது பேச்சில் கோபமுற்ற நீதிபதிகள், அவரை நீதிமன்றத்தை விட்டு வெளியேற வைத்தனர். அப்போது, இரு வழக்குகளும் வேறுவேறு பெஞ்ச் என்பதால், வேறு தன்மை கொண்டது என்பதால், அதில் தாங்கள் தலையிட முடியாது என்று கூறினர். எனவே, 18 பேர் குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வரலாம் என்று தினகரன் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

1 COMMENT

  1. அப்படியே அந்த 18 MLA க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டயனை உறுதி செய்து ஆறு மாதங்களுக்குள் இடை தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.அந்த 18 தொகுதியில் உள்ள ஏழை நடுத்தர மக்களுக்கு தலா 10000 குறையாமல் கிடைக்கும்.வேலையற்ற இளைஞர்கள் தேர்தல் வாக்கு பதிவு முடியும் வரை அரசியல் கட்சிகளின் 150 நாட்கள் வேலை வழங்கும் திட்டத்திற்காக கோஷம் போடுதல் ஊர்வலம் மற்றும் தலைவர்களின் பேச்சை கட்டாயமாக கேட்க கூறுவதற்காக தலா தினம் 500 ரூ பிரியாணி குவார்ட்டர்.பெறுவார்கள்.தொகுதிக்கு நூறு கோடிகள் வீதம் கிட்டதட்ட 2000 கோடி கறுப்பு பணம் மக்களுக்காக விநியோகம் ஆகும்.தமிழக தொலைகாட்சி சேனல்கள் மற்றும் பேச்சாளர்களுக்கு நல்ல வேட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories