தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தினரை குறிவைத்து, அவர்களின் கடைகள், வர்த்தக இடங்கள், வசிப்பிடங்கள் வீடுகளைக் குறிவைத்து இஸ்லாமிய அமைப்புகள் ஒன்று சேர்ந்து வெறித் தனமாகத் தாக்கியதால், கலவரம் வெடித்தது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொம்மிநாயக்கன்பட்டியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரது உடலை, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் தெரு வழியாக எடுத்துச் செல்ல முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே வாக்குவாதம் மூண்டது.
இதன் பின்னர் இஸ்லாமிய அமைப்புகள் அங்கே சமூக விரோதிகளை ஒன்று திரட்டினர். தொடர்ந்து, பட்டியலின சமூகத்தவரின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்து விரைந்த காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர். முடியாத சூழலில், தேனி நகரத்தில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கலவரப் பகுதிகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் நேரில் ஆய்வு செய்து நிலைமையைக் கேட்டறிந்தார். எரிக்கப்பட்ட வாகனங்கள் கடைகளை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். தற்போது நிலைமை கட்டுப் படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கலவரம் வெடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு தெருவிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.