பெரம்பலூர் அருகே கார்கள் மோதி விபத்து: குழந்தை உள்பட 8 பேர் பலி

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

car accident perambalur - 2026

பெரம்பலூர் 4 ரோடு அருகே நடந்த கோர விபத்தில் ஒரு குழந்தை உள்பட காரில் வந்த 8 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் நான்கு ரோடு என்ற இடத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ் சாலையில் பெரம்பலூரில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் நிலைதடுமாறி நடுக்கட்டையில் மோதியது. அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த (டவேரா) கார் மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இதில் டவேரா காரில் வந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு காரில் வந்த ஒருவர் உயிரிழந்தனர். மற்றொருவர் படுகாயத்துடன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.