
தெலங்காணா மாநிலத்தில் குளிர் நடுக்கி எடுக்கிறது. வெப்பநிலை மிகவும் குறைந்துவிட்டது.
மிகக் குறைந்த அளவு குமுரம்பீம் மாவட்டத்தில் 4.3 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிலாபாத் 4.6டிகிரி, மேட்சல் மால்காஜ்கிரி மாவட்டத்தில் 7.3, ஹைதராபாத்தில் 10.4 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தெலங்காணா மாநிலத்தில் தினமும் இரவு நேரத்தில் வெப்பநிலை மிக குறைந்து காணப்படுகிறது. குளிர் காற்றினால் மக்கள் நடுநடுங்கி வருகிறார்கள். இன்னும் இரண்டு நாட்களுக்கு மேலும் குளிர் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இமயமலையிலிருந்து மாநிலத்தை நோக்கி குளிர் காற்று வீசுவதாக தெரிகிறது. மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறட்சியான சூழ்நிலை நிலவும் என்றும் ஹைதராபாத் வானிலை மையம் தெரிவித்துள்ளது. குளிர் காற்றின் தாக்கத்தால் இரவு நேரத்தில் வெப்பநிலை மிக மிக குறைந்து குளிர் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
செவ்வாய் புதன் கிழமைகளில் பல இடங்களில் மிகக் குறைந்த அளவு வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். அதிலாபாத், கொமுரம்பீம் மாவட்டங்களில் வெப்பநிலை ஒரேயடியாக விழுந்துவிட்டது.
அதிலாபாத் மாவட்டத்தில் 3.6 டிகிரி செல்ஷியஸ், சங்காரெட்டி மாவட்டத்தில் 3.8, கொமுரம்பீம் மாவட்டத்தில் 4.3, குறைந்த அளவு வெப்பமாக பதிவாகியுள்ளன.