
- கலியுக கர்ணன் சோனூசூடுக்கு தெலங்காணாவில் கோவில்.
- ரியல் ஹீரோ என்று பாராட்டு.
பாலிவுட் நடிகர் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகி பலருக்கும் உதவி செய்து வருவதால் கலியுக கர்ணனாக புகழப் படுகிறார்.
அண்மையில் தெலங்காணா மக்கள் சோனூசூடை கௌரவிக்கும் விதமாக கோவில் கட்டிய ஆரத்தி எடுத்தார்கள்.
பாலிவுட் நடிகர் சோனுசூட் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் கர்ணனாக ரியல் ஹீரோவாக உள்ளதை மக்களை உணர்ந்துள்ளார்கள்.
மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் லாக்டௌனால் பல இடங்களில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியாக நின்று அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பெற்றார்.
இதுவரை தன் உதவி வேண்டியவர்கள் அனைவருக்கும் உதவி செய்து ரியல் ஹீரோவாக, ஆபத்பாந்தவனாக நின்றுள்ளார். அதனால்தான் அவரை “தேசம், பிரபஞ்சம் அனைத்திலுமே மனசுல மகாராஜாவாகவும் கலியுக கர்ணனாகவும்” தெலுங்கானா மக்கள் போற்றுகிறார்கள்.
இந்த வரிசையில் அவருடைய ரசிகர்கள் தம் குழந்தைகளுக்கும் கடைகளுக்கும் அவர் பெயரையே வைத்து உள்ளதோடு கூட மண்டலபால கிராமத்தில் சோனூசூட் சிலையை அமைத்து தம் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
அதோடு அண்மையில் தெலங்காணா மக்கள் சோனூசூடை கவுரவிக்கும் விதமாக ஒரு கோவிலை கட்டி உள்ளார்கள். இந்த சம்பவம் எங்கோ அல்ல… சித்திப்பேட்டை மாவட்டத்திலுள்ள துப்பாதண்டாவில் நடந்துள்ளது.
கோடிக்கணக்கானவர்களின் அன்பை சம்பாதித்த நடிகர் சோனூசூடை போற்றும் விதமாக இந்த கோவிலை கட்டியதாக துப்பாதண்டா மக்கள் தெரிவிக்கிறார்கள்.
சோனூசூட் விக்ரஹம் தயாரித்த சிற்பி மற்றும் உள்ளூர் மக்களின் முன்னிலையில் ஞாயிறன்று ஆலய தொடக்க விழா கோலாகலமாக நடந்தேறியது. இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூர் மக்கள் ஜெய்ஹோ சோனுசூட் என்று கோஷம் எழுப்பினார்கள். அதோடு அவருடைய சிலைக்கு ஆரத்தி எடுத்து பூஜைகளும் செய்தார்கள்.
அதுமட்டுமல்ல… இந்த கோவில் கட்டுவதற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சித்தி பேட்டை மாவட்டம் அதிகாரிகள் கூட உதவி செய்தது தான் சிறப்பு.
சோனூசூட் செய்த சேவைகளுக்கு அடையாளமாக அவருடைய கோவிலை கட்டி உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.