கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்றேற்றக் கழக உறுப்பினர் சேர்க்கை கள ஆய்வு பணி நடைபெற்றது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நெல்லை புறநகர் தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியதிற்குட்பட்ட அத்தியூத்து, கழநீர்குளம், பட்டமுடையார்புரம், நாகல்குளம், பெத்தநாடார்பட்டி ஆகிய பகுதிகளில் மாநில அம்மா பேரவை இணைச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா உறுப்பினர் சேர்க்கை கள ஆய்வை பணியை மேற்கொண்டார்

முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா சென்ற இடமெல்லாம் தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது ,மேலும் அவருக்கு தொண்டர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்க வந்ததனர் அவர்களிடம் சால்வை வேண்டாம் ,என மறுத்து விட்டார் தலைவரே சால்வை வேண்டாம் என்கிறர் நமக்கு எதற்கு என அன்பாக மறுத்துவிட்டார் ., அதையும் மீறி சால்வை போட வந்தவர்களிடம் வாங்கி அவருக்கே போட்டு சிறப்பித்தார்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம், மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கலா பத்மபாலா, ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய இணை செயலாளர் அருளானந்தம். ஒன்றிய பொருளாளர் விநாயாகபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
சால்வை வேண்டாமே …, தொண்டர்களிடம் மறுத்த முன்னாள் அமைச்சர்
Popular Categories



