ஆறு நாட்களாக முடங்கிய வேலைவாய்ப்பக ‘வெப்சைட்’

உள்ளூர் செய்திகள்

         வேலைவாய்ப்புத்துறை ‘வெப்சைட்’ 6 நாட்களாக முடங்கியதால் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
          கல்வித்துறையில் 4,320 ஆய்வக உதவியாளர்களும் மருத்துவத்துறையில் 676 ‘லேப் டெக்னீசியன்’ பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. ஆய்வக உதவியாளர் பணி நியமனத்திற்கு வேலைவாய்ப்பக பதிவுமூப்பு சீனியாரிட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் ஒரே சமயத்தில் தங்களது பதிவுமூப்பு விபரத்தை தெரிந்து கொள்ள வேலைவாய்ப்புத்துறை www.tnvellaivaippu.in ‘வெப்சைட்டை’ பார்க்கின்றனர்.அதேபோல் ‘லேப்டெக்னீசியன்’ பணியிடங்களுக்கும் மாநில அளவிலான பதிவுமூப்பு விபரம் வேலைவாய்ப்புத்துறை ‘வெப்சைட்’டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ‘வெப்சைட்’ 6 நாட்களாக செயல்படவில்லை. இதனால் பதிவு தாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்டோர் கூறுகையில், ”வேலைவாய்ப்பக அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. ‘லேப்டெக்னீசியன்’ பணிக்கான பதிவுமூப்பு விபரம் சரிபார்க்க முடியவில்லை,” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.