நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் உள்ள புளியரை, கரிசல் குடியிருப்பு ஆகிய கிராமங்களில் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.. தெற்கு மேடு செல்லும் பாதையில் குளம் உடைப்பு ஏற்பட்டதால் நீர் பெருகியுள்ளது.
பண்பொழி, வடகரை, கரிசல் குடியிருப்பு கடும் வெள்ளம் சூழ்ந்தது. மின்சாரம், போக்குவரத்து ஆகியவை துண்டிக்கப்பட்டது. கரிசல்குடியிருப்பு பகுதியில் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
புளியறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. மேலும் குளங்கள் உடையும் அபாயம் நீடிக்கிறது. மேலும் விவசாய நிலங்கள் அனைத்தும் பெரும் சேதம் அடைந்ததால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.




