
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று மதியத்துக்கு மேல் திருநெல்வேலி, நகர்ப் புற பகுதி,பாளை., உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது.



