அறந்தாங்கி ஒன்றிய அலுவலகத்தில் தமிழக சுற்றுசூழல்துறை அமைச்சர் கருப்பணன் புயல் குறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில் பேசினார்.புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி பகுதியில் கடந்த 16ந்தேதி காலை கஜா புயல் தாக்கியது.இதில் வீட்டில் இருந்த தோட்டத்தில் இருந்த தென்னை மரம்,வாழை மரம்,மா மரம்,பலாமரம் நிழல் தரும் வேப்பமரம்,புங்கமரம்,பூஞ்செடிகள் வேருடன் சாய்ந்தது.தற்காலிக தகரகொட்டகை கிற்றுக்கொட்டகை சேதமடைந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் அறந்தாங்கி நகர பகுதியில் ஒன்றிய பகுதியிலும் மின்சார வாரிய பணியாளர்கள் உள்ளுர் அதிகாரிகள் வழிகாட்டுதல் படி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில் களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.இதில் அதிகமான ஜேசிபி மற்றும் லாரிகள் மூலம் பணி நடந்து வருகிறது. அறந்தாங்கி நகர பகுதியிலும் அறந்தாங்கி தாலுகா பகுதியில் புயல் தாக்கம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல கிராமங்களில் பெண்கள் மாவு அரைக்க மிக்சி பயன்படுத்த செல்போன் சார்ஜ் செய்ய முடியாமலும் மாணவ மாணவிகள் கல்விபயிலமுடியாமலும் சிரமப்படுகிறார்கள்.கிராமங்கள் தோறும் குடிநீர் சப்ளை செய்ய வாட்டர் டாங்க் அருகே மின்சாரம் இன்றி இருப்பதால் ஜெனரேட்டரை அங்கு வேனில் கொண்டு சென்று அதன் மின்சாரம் பாய்ச்சி குடிநீ்ர் சப்ளை செய்யப்படுகிறது.இரவு நேர வெளி்ச்சத்திற்கு சிம்னி விளக்குகளை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.இதனால் கர்ப்பிணிகள் கைக்குழந்தை வைத்திருப்போர் முதியவர்கள் நோய்வாய்பட்டவர்கள் சிறிய குழந்தைகள்,எழுந்து நடமாட முடியாதவர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார்கள்.அறந்தாங்கி பகுதியில் புயலுக்கு பின் அதிகாரிகள் அமைச்சர்கள் எம்பிக்கள் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் பல்துறை அதிகாரிகள் களத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
அறந்தாங்கியில் கஜா புயல் தொடர்பாக 19ந்தேதி சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆய்வு கூட்டம் நடத்தினார்
Popular Categories



