மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தரின் மனைவி ராஜம் (84) சென்னையில் இன்று காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் கே. பாலசந்தர். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலமானார்
பாலசந்தரின் மனைவி உடலுக்கு ரஜினி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.