
கிணற்றில் தவறி விழுந்த யானைக் குட்டி ஒன்று தண்ணீரில் தத்தளித்தது. அதனை மீட்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே புளியங்குடியில் குட்டி யானை ஒன்று கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அதனை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
கிணற்றில் யானைக்குட்டி விழுந்த செய்தியை அறிந்ததும், ஊர் மக்கள் அந்தப் பகுதியில் வேடிக்கை பார்க்க திரண்டனர். அடிக்கடி இந்தப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து யானைகள் ஊருக்குள் வருவதுண்டு.



