பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை! ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
girl attack image - 2026

சேலத்தில் தாம் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்தது சேலம் மகளிர் நீதிமன்றம்!

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்! இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் ஒரு மகனும் ,இரண்டு மகள்களும் உள்ளனர்.

சகுந்தலா, தன் கணவனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரை விட்டுப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனிடையே, சரவணன், தன் இரு மகள்களுக்கும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், இரு பெண்களில் ஒருவர் கர்ப்பமடைந்ததை அடுத்து, இது குறித்து அறிந்த அண்டைவீட்டுக்காரர்கள் சரவணன் குறித்து சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சேலம் மகளிர் போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சரவணன் குறித்த தகவல்கள் உண்மை என அறிந்து, போலீசார் சரவணனை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் சரவணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.