நெல்லை மாநகர புதிய காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட பாஸ்கரன், இன்று காவல் ஆணையகத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
நெல்லை மாநகருக்கு காவல் ஆணையராக இருந்த மகேந்திரகுமார் ரத்தோட், சென்னை காவல் அகாடமி பயிற்சி பள்ளிக்கு அண்மையில் மாற்றப்பட்டார்.
அங்கு ஐஜியாக பணியாற்றி வந்த பாஸ்கரன் நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நெல்லை ஆணையரகத்தில் புதிய ஆணையராக பாஸ்கரன் பதவியேற்றுக் கொண்டார்.



