வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளவை…
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும். அதே நேரம் சில இடங்களில் மழையும் பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 8 செ.மீ, வேலூரில் 5 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பேனுகொண்டபுரத்தில் 3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
சென்னையில் வெப்பநிலை அதிக பட்சமாக 39 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸும் பதிவாகும்! வெப்பச் சலனம் காரணமாக சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்… என்று கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்!




