கோதையார் அணையில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் 3 பேர் நீரில் மூழ்கி பலி!
தமிழகத்தில் பள்ளி, கல்லுாரி விடுமுறை விடப்பட்டதை தொடா்ந்தும் அக்னி நட்சத்திர வெயிலின் தக்கத்தை தவிர்க்கும் வகையில் நீா்நிலைகளை தேடி சுற்றுலா பயணிகள் படையெடுத்த வண்ணம் உள்ளனா். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கோதையார் வனப்பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்கச் சென்ற சுற்றுலா பயணிகள் 3 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
உயிரிழந்த 3 பேரும் ஒரு குடும்பத்தை சோ்ந்த கேரளா சுற்றுலா என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சுற்றுலாவுக்காக கன்னியாகுமரி வந்த போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



