கோவில் நிலம் நாங்க ஆட்டையப் போட்ட தான் இருக்கு அதுல நீங்க எப்படி கோசால கட்டலாம்..? – இப்படித்தான் திமுக நிர்வாகி கோசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்!
தொட்டியம் சிவன் கோவில் அருகே கோ சாலை அமைக்க திமுக நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது! தொட்டியம் நகரில் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை அனலாடீஸ்வரர் என்ற சிவன் கோயில் உள்ளது.
இந்தக் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் திருப்பணிக் குழு மற்றும் நிர்வாகத்தின் சார்பில் கோவில் அருகே நந்தவனம் அமைத்து கோசாலை கட்டுவதற்கு முடிவு செய்தார்கள்.
இதை அறிந்த அந்தப் பகுதியில் தனியார் பள்ளி நடத்தி வரும் திமுக பேரூர் செயலாளர் நிர்மலா சந்திரசேகர் அந்தப் பகுதியில் நந்தவனம் மற்றும் கோசாலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து இது தொடர்பாக, மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது! மேலும் கோவில் அருகில் நந்தவனம் மற்றும் கோ சாலை அமைக்க அனுமதி அளித்தது! இதைத் தொடர்ந்து கோசாலை அமைக்க பூமி பூஜை நடத்தி கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று திமுக பேரூர் செயலாளர் நிர்மலா சந்திரசேகர் மற்றும் சிலர் நந்தவனம் மற்றும் கோசாலை கட்டுமானப் பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் நிர்வாகிகள் திருப்பணிக் குழுவினர் மற்றும் பொது மக்கள் அங்கே பெருமளவில் திரண்டனர்.
இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தி கலைத்தனர்.
கோவில் நிலத்தில் கோசாலை கட்ட திமுக நிர்வாகி எதிர்ப்பு தெரிவித்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோயில் நிலம் தங்களுக்கே சொந்தம்; கோயில் நிலத்தை ஆட்டைய போடத்தானே நாங்க இருக்கோம் என்று திமுகவினர் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
தாங்கள் நடத்தும் பள்ளி மற்றும் தொழிலகங்களுக்கு கோவில் நிலங்களை அவர்கள் அபகரித்து வருகின்றனர்; அதன் ஒரு பகுதியாக இது போன்ற செயலிலும் இந்த நிர்மலா சந்திரசேகர் ஈடுபட்டிருப்பார் என்று உள்ளூர் பிரமுகர்கள் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்.
திமுகவினரின் குண்டர் படை அராஜகம் என்றுதான் தொலையுமோ என்று தலையில் அடித்துக் கொண்டு கலைந்து சென்றனர் ஊர் மக்கள்!




