December 6, 2025, 3:22 AM
24.9 C
Chennai

தேர்தல் கருத்து கணிப்பு ராசி பலன் போன்றதுதான்; கீ.வீரமணி விமர்சனம்…!

ke.veeramani - 2025

தேர்தல் கணிப்பு என்பது ராசி பலன் போன்றதுதான் என்று திராவிடக் கழக தலைவா் கி.வீரமணி விமா்ச்சித்துள்ளார்.

இது சம்பந்தமாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் யாரக்குச் சாதகமாகவும்–யாருக்குப் பாதகமாகவும் இருந்தால் கூட நம்மைப் பொறுத்தவரை கருத்தக் கணிப்புகளை ஏற்பதோ, அதனை வைத்து தேவையற்ற முறையில் மேலும் கருத்தக்கள் அபிப்பிராயங்களைச் சொல்லவதோ கால விரயமேயாகும் என்பத எனது உறுதியான கருத்தாகும்.

பல நேரங்களில் கருத்தக் கணிப்பு என்று ஊடகங்களால் தொலைக்காட்சிகளால் சித்தரிக்கப்படுவது பெரிதும் ‘கருத்து திணிப்பே’ ஆகும்.

தேர்தல் கணிப்பு –ராசி பலன் போன்றதே!
ராசி பலன், ஜோதிடப் பலன் கூறுவோர் வரிசையில் இதுவும் ஒருவகை அவ்வளவுதான் வெறும் வாயை மெல்லுவோரக்குக் கிடைத்த கொஞ்சம் அவல் ஆகும்.

இதை தடை செய்யவேண்டும், அல்லது தவறாகப் போனால் அதற்குரிய பொறுப்பை வெளியிட்டவா்கள் ஏற்று, தண்டனைக்கு ஆளாக்கப்படல் வேண்டும்.

கடைசி நேரத்தில் வாக்களித்த பிறகு அவர்களிடம் திரட்டிய கருத்து என்று வெளியிடுவதுகூட சரியாகவே அமைவதில்லை இந்திய தோ்தல் முடிவுகளில் எடுபடாது

அப்பணியில் பல காலம் ஈடுபட்ட தனியார் தொலைக்காட்சியின் நிறுவனரும் சிறந்த அரசியல் விமர்சகருமான பிரணாய்ராயும், டோராப் ஆர் சோப்ரிவாலாவும் இணைந்து அண்மையில் இந்தியத் தேர்தல்கள் முடிவு ஆய்வுகளைப் பற்றி எழுதி உள்ள ஒரு அருமையான ஆங்கில நுால் வெளிவந்துள்ளது. ‘தி வெர்டிக்ட்’–டீகோடிங் இந்தியாஸ் எலெக்ஷன்ஸ்’ என்பது அப்புத்தகத்தின் தலைப்பு

அதில் பக்கம் 117-ல் ஒரு முக்கிய கருத்தை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள் ‘வாக்களித்துவிட்டு வெளியே வருபவர்களிடம் கருத்து கேட்டு திரட்டப்பட்ட கருத்துக்
கணிப்புகளில் 5-ல் 4 பங்கு பெரிய கட்சியின் வெற்றிகளைக் குறைத்து மதிப்பிடுவதே வழமையாகும்’

மேலும் கூறுகிறார்கள்
கருத்துக் கணிப்புகள் தவறாகி விடுவதற்கு முக்கியக் காரணங்கள்

1.‘சிறிய சாம்பிள் சர்வே அளவுகள் தவறான சாம்பிள் டிசைன், வெல்லும்ம் இடங்களைப் பற்றி தவறான கணிப்பு’ –இப்படி பல உண்டு என்கிறார்
.
தேர்தல் ஆணையம் நம்பகத்தன்மையுடன் செயல்படுகிறதா?
இவை ஒருபுறமிருக்க தலைமைத் தேர்தல் ஆணையம் மக்களின் நம்பிக்கையை, அதன் சுதந்திரமான செயல் என்ற கருத்தை மாற்றிடும் வகையில் நிகழ்வுகள் அடுக்கடுக்காக நாளும் வந்து கொண்டிருக்கின்றன.

பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும் அது மிகவும் சாதகமாக நடந்துகொள்கிறது என்று சாதாரணமானவர்களுக்கும்கூட எண்ணும்படி ஆகிவிட்டது.

அதன் சக உறுப்பினர் ஒருவரே, ‘பிரதமர் மோடி அமித்ஷா மீது சட்டப்படி விதி மீறல் குற்றச்சாட்டுகளை மறுதலித்தது தவறு தன்னுடைய முடிவு அவர்கள் விதி மீறியுள்ளனர். என்பதை ஏனோ பதிவுகூட செய்ய மறுத்திருக்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்

எனவே அதுபோன்ற கூட்டங்களை அவர் கூட்டினால் நான் அதில் பங்கேற்ற மாட்டேன்’ என்று கூறுகிறார்
மூன்று உறுப்பினர்களும், தலைமைத் தோ்தல் ஆணையர்களும் சம அதிகாரம் பெற்றவர்களே ஆவார்கள்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் 17-ம் தேதி நடக்காமல் 19-ம் தேதி இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு பிரதமருக்கு வசதியாக 17-ம் தேதி காலை 10 மணிவரை பேசிட அனுமதித்தது பாரபட்சமல்லவா என்று அத்தனை எதிர்க்கட்சித தலைவர்களும் கேட்டுள்ளார்கள்.

ஏழு கட்டம் என்று சொல்லி இவ்வளவு காலம் நீட்டியதே ஆளும் கட்சியான பாஜகவுக்கு பிரதமா் மோடி–பல ஊர்களிலும் பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை அளிக்க மறைமுக உதவியே என்ற குற்றசச்சாட்டும் வைக்கப்படுகிறது.

தற்போது உள்ள தேர்தல் ஆணையத்தினை மாற்றியமைக்க அதன் நம்பகத்தன்மை இழப்பு காரணமாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தக்க நேரத்தில் சட்டப் பரிகாரம் தேடிட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம், அவசரம் தோ்தலில் நிற்காத பொது அமைப்பு என்பதால், நாம் இதைக் கூறுகிறோம்’ என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories