spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeநலவாழ்வுமலச் சிக்கல் தீர்க்கும் மகத்தான வழிமுறைகள்!

மலச் சிக்கல் தீர்க்கும் மகத்தான வழிமுறைகள்!

- Advertisement -

மலச்சிக்கல் பலச்சிக்கல் : மலச்சிக்கல் போக்குவதற்கான வழிமுறைகள்…

திருச்சி அமிர்தா யோக மந்திரத்தில் மலச்சிக்கல் போக்கும் வழிமுறைகள் யோகா ஆசிரியர் விஜயகுமார் எடுத்துரைத்து பேசுகையில் நவநாகரிக உலகில் உடல் உழைப்பு குறைந்து விட்டது. நவீன வசதிகளுடன் மக்கள் வாழ பழகி விட்டார்கள். சுற்றுச்சூழல் மாசு, நீர் மாசு, காற்று மாசு உள்ளிட்ட பஞ்ச பூதங்களும் மாசடைந்து விட்டதால் மனிதன் எண்ணற்ற உபாதைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

வேலைப்பளுவாலும், மன உளைச்சலாலும், போதுமான குடிநீர் அருந்தாதாலும் மலச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள்.

கோடை காலங்களில் நீர்ச்சத்து அதிகமாக உடலில் இருந்து வெளியேறுவதால் மலச்சிக்கலுக்கு ஆளாகிறார்கள். இப்படி மலச்சிக்கலானது பல சிக்கலை ஏற்படுத்துகிறது.

மலச்சிக்கலினால் வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தலைவலி, உடல் வலி, சோர்வு, தூக்கமின்மை, வயிற்றுப்புண், மூல வியாதி, தோல் வியாதி மேலும் உடலில் அமிலத்தன்மையை அதிகப்படுத்தும். சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

மலமானது இயல்பாகவும் சுலபமாகவும் கழிக்கவேண்டும். துர்நாற்றம் வீசக் கூடாது. ஒரு நாளைக்கு இரு முறையாவது மலம் கழிக்க வேண்டும். உறங்கி அதிகாலை எழுந்த 30 நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும்.

மலம் கழிப்பது ஓரிரு நிமிட வேலையாகும். அதிக நேரத்துடன் அதிக சிரமத்துடன் மலம் கழிக்கக்கூடாது. மலம் கழிக்கும் முன்போ பின்போ வயிறு வலிக்க கூடாது. மலத்துவாரத்தில் அரிப்பு எரிச்சல் வரக்கூடாது.

ஏனென்றால் மனிதன் தன்னை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஆரோக்கிய முறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படி பசிக்கிறதோ அதேபோல செரிக்க வேண்டும்.

நாம் உண்ணும் உணவானது வாய் ,பல், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கணையம் வழியாக சென்று ஜீரணம் நடைபெறுகிறது .நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, தொண்டை, மூச்சுக் குழாய், நுரையீரல், வழியாக தூய காற்றை உட்கொண்டு நுரையீரல் கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது.

ரத்த நாளங்கள், இதயம் உடல் முழுக்க ரத்தத்தை பரவச் செய்கின்றது.

உடல் கழிவுப் பொருட்களை சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் ஆகியன வெளியேற்றுகின்றன.

முதுகு தண்டுவடம் மூளை நம்மை ஆட்கொள்கின்றன.

மேற்கண்டவாறு மனித உடலானது நித்தம் நித்தம் நடைபெற்று வருகிறது.

நமது உணவை ஜீரணம் செய்யும் பகுதி வாய்க்குழி, நாக்கு, உணவுக் குழாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், இவையெல்லாம் உணவுக்குழாயின் உறுப்புகள் ஆகும் .

நாம் உண்ணும் உணவானது வாய் வழியாகச் சென்று பற்களால் மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து இரைப்பைக்கு செல்கிறது. பிறகு இரைப்பை சிறுகுடல் சுவர்களில் உள்ள ரத்த நாளங்களால் சக்திகள் உறிஞ்சப்படுகின்றன.

இவ்வாறு ரத்தத்துடன் கலந்த உணவு நேராக கல்லீரலுக்கு செல்லும். பின்னர் உடலின் இதர பாகங்களில் செல்லும். ஜீரணிக்கப்பட்ட புரோட்டீன்கள் இறுதியாக அமினோ அமிலங்களாக திசுக்களை சரி படுத்தப்படுகின்றன.

கழிவு பொருட்கள் நீக்கமானது சிறுகுடலில் இருக்கும் உணவானது பெருங்குடலில் கலக்கும் போது உணவின் சத்தானது ரத்தத்தில் கலந்துவிடும்.

எஞ்சிய ஜீரணிக்க முடியாத பொருட்கள் பெருங்குடலில் சிதைந்து மலக்கழிவு ஆகிறது . மலக்கழிவானது தினமும் வெளியேற வேண்டும்.

உடலில் உணவு பொருளில் உள்ள சத்துக்களை சிறுகுடல் பிரித்து மிச்சத்தை பெருங்குடலுக்கு அனுப்பும் இவ்வாறு இளகி வரும் பொருளிலுள்ள திரவத்தை உறிஞ்சிக் கொள்ளும் போது கழிவு இருகி விடுகிறது. பின்னர் பெருங்குடல் சதை மலக்கழிவை வெளித்தள்ளுகிறது. கழிக்கப்படும் வரை மலக்கழிவானது சிக்மாய்டிலும் மலக்குடலிலும் இருக்கும்.

குடிநீர் குறைவாக அருந்துவோர் நவநாகரீக பொறித்த உணவை, மாறுபட்ட உணவை உண்ணுவோர் மலச்சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

ஆதலால் மலக்குடலில் மலக்கழிவு அதிக நேரம் தங்கி உடலின் சீரான இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. மனித உடலில் நடக்கும் சீரான இயக்கத்தில் மலம் கழிப்பதும் ஒன்றாகும் அதுவே பிரச்சினையாகும்போது மலக் கழிவை வெளியேற்ற இயற்கை மருத்துவ முறையில் எனிமா பயன்படுகின்றது.

எனிமா எடுத்துக் கொள்ளும் முறை

இயற்கை மருத்துவ அங்காடிகளில் எனிமா குடுவை விற்கின்றது. இக் குடுவையானது 750 மிலி குடிநீர் கொள்ளுமளவு எனிமா குடுவையுடன் அரை மீட்டர் பிளாஸ்டிக் குழாயுடன் நாசில் பொருத்தப்பட்டிருக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் எனிமா குடுவை நாசிலில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். பிறகு எனிமா குடுவையில் நீரை நிரப்பியவுடன் சிறிது நீரை வெளியேற்றவும் அப்போது காற்று குமிழ்கள் வெளியேறிவிடும். பின்பு எனிமாகுடுவையினை உயரமாக பிடித்துக்கொண்டு சற்றே முன் குனிந்து ஆசனவாயில் நாசிலை சொருக வேண்டும். சில நிமிடங்களில் நீர் மலக்குடலில் சென்றுவிடும் .

பிறகு நாசிலை எடுத்து எனிமா குடுவையை வைத்து விட்டு 10 நிமிடம் சவாசனத்தில் படுத்துக் கொள்ள வேண்டும். மலக்குடலில் சென்ற நீர் மலக்குடல் உட்புறத்தில் இருக்கும் இருக்கும் மலக்கழிவினை இளக்கி விடும். உடன் மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படும் அப்பொழுது மலம் கழிக்க வேண்டும்.

பொதுவாக மலச்சிக்கல் இருக்கும் பொழுது எனிமா குடுவினையை பயன்படுத்தி மலம் கழிக்கலாம்.

படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் எனிமா பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

  • யோகா விஜய், திருச்சி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe