நாடு முழுவதும் நீட் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்த மாணவி ரிதுஸ்ரீ 12 ஆம் வகுப்பில், 600 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். டாக்டராக வேண்டும் என கனவு கொண்ட மாணவி ரிதுஸ்ரீ, கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதினார். நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், மாணவி ரிதுஸ்ரீ தேர்வில் தோல்வி அடைந்தார். தனது டாக்டர் கனவு தகர்ந்ததால் மனமுடைந்த மாணவி ரிதுஸ்ரீ தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக மாணவியின் தாயார் ராஜலெட்சுமி தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வில் தோல்வி; மாணவி தற்கொலை!
Popular Categories



