கன்னியாகுமரி கக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ் நினைவு அஞ்சலிக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னையை அடுத்த திருவள்ளுர் மாவட்டம் பாடி பகுடியில், கடந்த 18.6.2014 அன்று, தனது கடை அருகே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டார் சுரேஷ்.
கன்னியாகுமரி மாவட்டம் கக்கோட்டைச் சேர்ந்த சுரேஷ், இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவராக இருந்து வந்தார்.
சுரேஷின் வீர வணக்க நாள் வருடம் தோறும் இந்து முன்னணியினரால்
அவரது சொந்த ஊரான குமரி மாவட்டம் கக்கோட்டில் கடைபிடிக்கப் படுகிறது.
அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்துதல், நினைவேந்தல் கூட்டம் நடத்துதல், நினைவுக் கொடியேற்றம் செய்தல், அன்னையரின் பஜனை நிகழ்ச்சி, இசை அஞ்சலி செலுத்துதல், அன்னதானம் செய்தல் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
இதில் இந்துமுன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாநில செயற் குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், மாநில நிர்வாக குழு உறுப்பினரும் மத்திய அரசு வழக்கறிஞருமான குற்றாலநாதன், மாவட்டத் தலைவர் மிசா சோமன், மாவட்ட துணை தலைவர் ராஜேஸ்வரன் மற்றும் மாவட்ட, நகர, இந்து அன்னையர் முன்னணி நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.



