
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும்.
இந்த காலகட்டத்தில் சீசனை நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து குளித்து மகிழ்ந்திட குற்றாலம் நோக்கி படையெடுத்து வருவது வழக்கம்.
இவர்களுக்காக தங்கும் விடுதிகள், தனியார் நவீன காட்டேஜ்களும் தனித்தனியாக உள்ளன
இந்நிலையில் குற்றாலம் விடுதியில் தங்கிய பெண்களை பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 போலீசார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் மாலை குற்றாலத்தில் தனியார் காட்டேஜில் சீசனை அனுபவிப்பதற்காக நெல்லை கொக்கிரகுளத்தைச் சேர்ந்த ரமணி என்ற இளம்பெண் தனது தோழிகளுடன் தங்கியிருந்தார்.
இவர்களை நெல்லை அருகே உள்ள கீழஓமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கிளிண்டன் (23) என்பவர் உல்லாசத்திற்கு அழைத்ததாகவும், அவர்கள் மறுக்கவே கிளிண்டன் நண்பர்களான ரமேஷ்பாபு, விஜய்ஆனந்த் ஆகியோரை உதவிக்கு அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அப்போது அங்கு நெல்லை ஆயுதப்படையில் போலீஸ் வேன் டிரைவராக பணியாற்றும் மணிகண்டன், போலீஸ்காரர் மகாலிங்கம் ஆகியோரும் வந்து அந்த இளைஞர்களுடன் சேர்ந்து ரமணியை உல்லாசத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
அவர் மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்ததாகவும் தெரிகிறது.
தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து பெண்ணை மிரட்டியது, பணம் பறித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சங்கரன்கோவில் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



