
தென்காசி, செங்கோட்டை மற்றும் சுரண்டை உப மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை இன்று மின் விநியோகம் தடைப்படும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்காசி பகுதிக்கு வருவதால், தென்காசியில் மின் தடை ரத்து செய்யப் பட்டுள்ளது.
முன்னதாக, தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து மத்தளம்பாறை, திரவியம் நகர், ராமசந்திர பட்டினம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கரிசல், புளியரை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை,
பிரானூர் பார்டர் வல்லம்,கற்குடி,தெற்குமேடு, மேக்கரை,பூலான் குடியிருப்பு,புதூர், கற்குடி, கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையநேரி, ரெட்டை குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ.கே.புதூர், வாடியூர், கழுநீர்குளம், ஆனைக்குளம், கரையாளனூர் அச்சங்குட்டம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1
முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தென்காசி மின் பகிர்மான செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்திருந்தார்.
ஆனால் இன்று மாலை முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா மற்றும் அமமுக.,வினர் பலர் அதிமுக.வில் இணையும் விழா நடைபெறுவதை முன்னிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தென்காசிக்கு வருகிறார். இதை அடுத்து, மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப் பட்டுள்ளது. இதனால் தென்காசி பகுதி வியாபாரிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.



