ரஜினி பாஜக.,வில் இணைய ஆசை! பொன் ராதாகிருஷ்ணன்!

சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
pon radhakirshnan - 2026

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்திருக்கிறார் எனவும், வருகின்ற ஏப்ரல் மாதமோ அல்லது தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னோ அவர் கட்சி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என்றும் அவர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு பக்கமிருக்க ஒரு சிலர் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவார் என்றும், அல்லது பாஜகவில் இணைவார் என்றும் வதந்தியை கிளப்பி வருகின்றனர்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது

rajini 1 - 2026

முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று பேட்டி ஒன்றில், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதனை தான் வரவேற்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மட்டுமமில்லாமர் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.