Homeஉள்ளூர் செய்திகள்சென்னைபுத்தகக் கண்காட்சியில் வாசகர் கவனம் ஈர்த்த சிறப்பு அரங்கு..!

புத்தகக் கண்காட்சியில் வாசகர் கவனம் ஈர்த்த சிறப்பு அரங்கு..!

மகாகவி பாரதியாரின் ஆளுயர கட்அவுட் ஒன்று இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் வரிசையில் நின்று சுயபடம் (செல்பி)

bookfair stall2 - Dhinasari Tamil

சென்னை நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. விளையாட்டு திடலில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியில் தேசத் தலைவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அரங்கு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கண்காட்சியில் 3-வது நுழைவு வாயிலில் அரங்கம் எண் 191 மற்றும் 192-ல் இந்த சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு, மகாகவி பாரதியாரின் 100-வது ஆண்டு நினைவு, கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 150-வது ஆண்டு பிறந்த நாள் ஆகிய முப்பெரும் நிகழ்வுகளை கருப்பொருளாகக் கொண்டு இந்த சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

chennai book fair stall - Dhinasari Tamil

கண்காட்சியில் 800 அரங்குகள் உள்ளன. குறிப்பாக 191 மற்றும் 192-வது அரங்கு சிறப்பு அரங்காக அமைக்கப்பட்டுள்ளது பள்ளி, கல்லூரி மாணவர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது. காந்தி, நேதாஜி, திலகர், வல்லபபாய் படேல், அம்பேத்கர், நேரு மற்றும் இந்திய சுந்திரப் போரில் ஈடுபட்டு தியாகிகள் குறித்த நூல்கள் அனைத்தும் திரட்டப்பட்டு ஒரே அரங்கில் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர வீர சிவாஜி, கட்டபொம்மன், ஜான்சிராணி, மருது சகோதரர்கள் என சரித்திர கதைகள், நாவல்கள், ஆய்வாளர்கள் எழுதிய இந்திய வரலாற்று நூல்கள், 100 ஆண்டுகளில் பாரதியார் குறித்து வெளிவந்துள்ள பல்வேறு பதிப்பாளர்களின் வெளியீடுகள், வ.உ.சி. எழுதிய நூல்கள், புரட்சியாளர்கள், காந்தியின் சுயசரிதை என எண்ணற்ற நூல்கள் திரட்டப்பட்டு கண்காட்சியில் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

bookfair stall - Dhinasari Tamil

குறிப்பாக மகாகவி பாரதியாரின் ஆளுயர கட்அவுட் ஒன்று இந்த அரங்கில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள், சிறுவர்கள், பெண்கள் வரிசையில் நின்று சுயபடம் (செல்பி) எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

குடும்பத்துடன் நின்று படம் எடுத்து மகிழும் வகையில் இந்த கட்-அவுட் அமைக்கப்பட்டு வாசகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அரங்கிற்கு வரும் சிறார்களுக்கு தேசியக் கொடி அணிவிக்கப்பட்டு விடுதலை நாள் எழுச்சி ஊட்டப்பட்டு வருகிறது.

காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சி, இன்னும் 5 தினங்களே உள்ளதால் வாசகர்கள் குவிந்து வருகின்றனர். தேசத் தலைவர்களுக்கான இந்த சிறப்பு அரங்கிற்கு வருவோர் 3-வது நுழைவுவாயிலில் நுழைந்தால் அரங்கம் எண் 191-ஐ எளிதில் அடையலாம்.

இது தொடர்பான விவரம் வேண்டுவோர் 6374 700 858, 99404 81276 ஆகிய கைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,159FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,504FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

பள்ளித்தேர்வில் RRR படத்தைப் பற்றி கேட்கப்பட்ட கேள்வி! வைரல்!

ரசிகர்களும் இதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நான் தில்லி பையன், ஹிந்தி சரளமாக பேசுவேன்.. சித்தார்த்! இந்த பொழப்புக்கு பானிப்பூரி விக்கலாம் வைச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

நடிகர் சித்தார்த் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதில்லை. ஏனோ அந்தப் படங்கள்...

Latest News : Read Now...