December 13, 2025, 4:22 PM
28.1 C
Chennai

சென்னை வேளச்சேரியில் 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகளை போலீசார் பறிமுதல்..

images 2022 09 02T093911.199 - 2025

சென்னை வேளச்சேரியில் 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் வேளச்சேரி பகுதிகளில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சென்று அந்த 5 பேரை மடக்கிப் பிடித்தனர். அவர்களை விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 4,400 மாத்திரைகள் மற்றும் 90 டானிக்குகள் இருந்தன.

வலி மற்றும் சளி போன்றவற்றிற்காக வழங்கப்படும் இந்த மருந்துகளை போதை மருந்துகளாக மாற்றி அந்த பகுதியில் விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து இது தொடர்பாக வேளச்சேரியைச் சேர்ந்த ஜானகிராமன், முனீஸ்வரன், பாலுசாமி, சுல்தான் அலாவுதீன், நரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் விசாரணையில் சுல்தான் அலாவுதீனும் நரேசும் மருத்துவ பிரதிநிதிகளாக வேலை பார்த்து வருவதும் இவர்கள் மருந்துகளை மருந்தகங்களுக்கு சப்ளை செய்யாமல் அவற்றை போதை மருந்துகளாக மாற்றி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் மாத்திரைகள் மற்றும் டானிக்குகளை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மெக்காலே மனோபாவத்தை நிராகரிப்போம்!

சசி தரூர் ஐநாவின் மேனாள் துணை செயலாளர். சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவர். திருவனந்தபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் .

பஞ்சாங்கம் டிச.13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மாறும் பாசஞ்சர் ரயில் எண்கள்; இனி இந்த எண்கள்தான்!

தெற்கு ரயில்வே பெரும்பாலான பயணிகள் ரயில் எண்களை மாற்றியுள்ளது. மதுரை-விருதுநகர்- ராஜபாளையம் -வழி பாசெஞ்சர் ரயில்களின் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பறை இசை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்கக் கூடாது? : ஆளுநர் ரவி கேள்வி!

பறை இசையை பள்ளி கல்லூரி மாணவர்களிடம் ஊக்கப்படுத்துகிறோம் அதே வேளையில், பறை இசை கலை குறித்து பாடத்திட்டத்தில் ஏன் சேர்க்க கூடாது? பறை இசை குறித்து அறிவியல் பூர்வமாக ஏன் ஆய்வு மேற்கொள்ள கூடாது?

கார்த்திகை பூரம்; நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீ ஆண்டாள் கார்த்திகை பூரம் தின விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் பிறந்த இடமான நந்தவனத்தில் எழுந்தருளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

Topics

கங்கைக் கரை படகோட்டிகள் “வணக்கம் காசி!” என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்!

“கங்கைக்கரையின் படகோட்டிகள் "வணக்கம் காசி!" என்று சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம்” இது...

பஞ்சாங்கம் டிச.12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

Entertainment News

Popular Categories