ஆச்சி ஆட்சின்னு வார்த்தை விளையாட்டா? செல்லூர் ராஜுவுடன் மல்லுக்கட்டும் ஹெச்.ராஜா!
நடிகர் ரஜினி காந்த் ஆச்சிய பிடிக்க முடியாது, ஆட்சியப் பிடிக்க போறாரான்னு கேட்டாலும் கேட்டார் செல்லூர் ராஜூ, இப்போது கடும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். செட்டிநாட்டு ஆச்சியை இழிவு படுத்துவதாக அவரது கருத்து அமைந்துவிட்டதாக, நகரத்தார் சமூகம் அவருக்கு எதிராகக் கொதித்து எழுந்திருக்கிறது.
என் பெயரை பயன்படுத்தாதே; தம்பி திவாகரனுக்கு அக்கா சசிகலா நோட்டீஸ்
சசிகலா புகைப்படத்தையோ, பெயரையோ எங்கும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். ’என் உடன் பிறந்த சகோதரி சசிகலா’ என ஊடகங்களில் குறிப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தண்ணீர் அருந்தா போராட்டம்தானே! அதான் வெந்நீர் அருந்தினேன்..! : சங்கொலி வைகோவால் சிரிப்பொலி!
ஒரு விதத்தில் வைகோவைப் பாராட்ட வேண்டும். தண்ணி அருந்தாப் போராட்டம் என்ற பேனரின் கீழ் இத்தனை ஊடகங்கள் பார்வை இருந்தும், எந்த வித அச்சமும் இன்றி, அனைவரின் பார்வையிலும் படும் வகையில் தண்ணீர் அருந்தினார் இல்லையா?! ஒளித்து மறைந்து ஒதுங்கிப் போய் குடிக்கலையே என்று சிலாகிக்கிறார்கள் வைகோ கண் மூடி ரசிகர்கள்!
எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர்கள்
எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசிப்பவர்கள்தான் நடிகர்
கள் - ரஜினியை மறைமுகமாகத் தாக்கிய சுப்பிரமணியசாமி
கிரண்பேடி Vs நாராயணசாமி; பத்து நிமிடத்துக்கு பகையை மறக்க வைத்த கம்பன் விழா!
புதுச்சேரி கம்பன் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்த புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார் கிரண்பேடி.
17 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
17 குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமைகள் தங்க வைக்கப்ப்பட்டது தொடர்பாக
அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்: காரைக்குடி நகரத்தார் சங்கம்
அமைச்சர் செல்லூர் ராஜு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காரைக்குடி நகரத்தார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து காரைக்குடி நகரத்தார் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஜினி பற்றிய அரசியல் விமர்சனத்தில் ரஜினி தமிழக ஆட்சியை...
சுப்பிரமணிய சுவாமியுடன் மோதல் போக்கு இல்லை: எஸ்.குருமூர்த்தி
சுப்பிரமணிய சுவாமியுடன் எனக்கு மோதல் போக்கு எதுவும் இல்லை என்று தனது டிவிட்டர் பதிவில் தெளிவாக்கியுள்ளார் பத்திரிகையாளரும் ஆடிட்டருமான எஸ்.குருமூர்த்தி.
காவல்துறை ஆதரவால் உயிருடன் உள்ளேன்: லாவண்யா
வழிப்பறி கொள்ளையர்களால் தாக்கப்பட்டு உயிர் பிழைத்த ஐ.டி. ஊழியர் லாவண்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும், “எனது தைரியத்தால் மட்டும் இதிலிருந்து விடுபடவில்லை. காவல்துறை உள்ளிட்ட பலரது ஆதரவால்தான்...
செவிலியர் இடமாறுதல் கலந்தாய்வு விரைவில் ஆன்லைனில் நடத்தப்படும்: அமைச்சர்
தமிழகத்தில் விரைவில் செவிலியர் சீருடை மாற்றப்படும் இதற்கு முதல்வரும் அனுமதி வழங்கியுள்ளார் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ்., உமாமகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விரைவில் மாற்றம் கொண்டு வரப்படும் என்றும் செவிலியர்...
கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரியில் தண்ணீர் திறக்கப்படும் : தமிழிசை பேட்டி
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக, பாரதீய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தலுக்கான பாரதீய ஜனதா கட்சி வெளியிட்ட...
பொதுமக்களை நீண்ட நேரம் நிற்க வைப்பதால் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தேன்: சாதிக்
சென்னையில் அமெரிக்க துணை தூதரகத்துக்கு மிரட்டல் விடுத்த நபர் போலீசில் சரணடைந்துள்ளார். நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய ஒரு நபர், அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இன்று அதிகாலை...