
நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் இந்து பெண்கள் அனைவர் குறித்தும் மனு நீதியின் பெயரால் தான் சொல்ல வந்ததைச் சொல்லி, மோசமாக விமர்சனம் செய்ததை அடுத்து இந்து சமுதாயப் பெண்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து பாஜக., களம் இறங்கியது. தமிழகம் முழுதும் இன்று பல்வேறு இடங்களில் திருமாவளவனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தர்மபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக இன்று கண்டனம் தெரிவித்து, திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி தருமபுரி BSNL அலுவலகம் எதிரே மாவட்ட தலைவர் L. அனந்தகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பெரும் திரளான பாஜக., தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் கலவரம் செய்யும் நோக்குடன் வன்முறையில் ஈடுபட வந்தார்கள் என்றும் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

தென்காசியில் விசிக.தலைவர் திருமாவளவனை கண்டித்து நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 23 பெண்கள் உட்பட மொத்தம் 160 பேர் கைது செய்யப்பட்டனர்.



