கோயம்புத்தூர்ல இருந்து சென்னைக்கு தினசரி மூன்று,பகல் நேர இண்டரசிட்டி ரயில்கள் உள்ளன. பெங்களூருக்கு பகல் நேரங்கள்ல இரண்டு ரயில்கள் உள்ளன. உதய்,டபுள்,டெக்கர் இண்டர்,சிட்டி ரயிலாக உள்ளது. அதே போல மயிலாடுதுறை செல்ல ஜன சதாப்தி பகல்ல இண்டர்சிட்டி கனெக்ஷன் ஆக உள்ளது.
எனவே, கோயம்புத்தூர் டூ,திருநெல்வேலிக்கு காலை ஏழு,மணிக்கு கிளம்பி மாலை இரண்டுமணி க்கு திருநெல்வேலி செல்லவும் மறு மார்க்கமாக திருநெல்வேலியில் இரண்டரை மணிக்கு கிளப்பி கோயம்புத்துர்க்கு ஒன்பதரை,மணிக்கு வந்து சேரும் வகையில தினசரி இண்டர் சிட்டி ரயில் விட வேண்டும்.
மதுரை திருநெல்வேலி போன்ற இடங்களில் லாட்ஜிங் செக் அவுட் நேரம் பகல் பன்னிரண்டு,மணி என்று இருப்பதால் கோயம்புத்தூர்ல காலை ஏழு மணிக்கு கிளம்பி மதுரையில திருநெல்வேலியில பகல்,பன்னிரண்டு மணி நேரத்துக்கு ஒரு நாள் லாட்ஜ் புக் செய்து கோவில்,தரிசனம் அல்லது பிசினஸ் விசிட் டூர் விசிட் செய்து திரும்ப முடியும்.
மதுரையில மீனாட்சி அம்மன் கோவில் அழகர் கோவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கள்ஐ தரிசித்து அதே இண்டர் சிட்டி ரயில் மூலமாக அன்றே,அல்லது ஒரு நாள் வாடகையில் தங்கி மறு நாள் திரும்ப முடியும். அதே போல நெல்லை,காந்திமதி அம்மன் திருச்செந்தூர் முருகன் கோவில் சங்கரன் கோவில் சங்கர நயினார் கோவில்கள்ஐ தரிசித்து ஒரு நாள் லாட்ஜ்ல தங்கி திரும்ப முடியும்.
எனவே தமிழக பாஜக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்துக்கள் அமைப்புகள் கோயம்புத்தூர்ல காலை ஏழு,மணிக்கு திருநெல்வேலி வரை இண்டர் சிட்டி ரயில் கிளம்பி இரவு,ஒன்பது மணிக்கு திரும்ப ரயில் விட கோரிக்கையாக வைக்க வேண்டும். அந்த ரயில் திருப்பூர் ஈரோடு,கரூர் ,திண்டுக்கல் மதுரை வழியாக அல்லது பொள்ளாச்சி பழநி திண்டுக்கல் மதுரை வழியாக ஏதாவது ஒரு வழியில் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.
- ராமசாமி வெங்கட்ராமன்