பெருந்துறையை அடுத்துள்ள ஸ்லேட்டர் நகர் பகுதியில் எதிரே வந்த பைக் மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சென்னிமலை கவுண்டர் மகன் கந்தசாமி (65). விவசாயியான இவர், நேற்று மாலை தனது சொந்த வேலையாக துடுப்பதிக்கு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.