மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்ரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நவராத்ரி விழாவையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில், அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இக் கோயிலில் நவராத்ரி விழாவானது அக்.7ம் தேதி தொடங்கி, அக். 14.ம் தேதி வரை நடைபெறுகிறது.
தினசரி மாலை நேரங்களில், அம்மன் , பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளிப்பார்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் , பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.
இதேபோல, மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், பிரளயநாத சிவன், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரர், சித்திவிநாயகர் ஆலயங்களிலும், நவராத்ரியையொட்டி, அம்மன், ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் நவராத்ரி விழாவில் இரண்டாம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் அருள் பாலித்தார்
முதல் நாளில் மீனாட்சியம்மன், ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்., இரண்டாம் நாளில் மீனாட்சியம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில், நவராத்ரியையொட்டி, சர்ப ரூபினி அலங்காரத்தில், அம்பாள் காட்சி அளித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பேட்டை வீரமாகாளி இரண்டாம் ஆண்டு நவராத்திரி உற்சவ விழாவில் அம்மன் இரண்டாம்நாள் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்த போது எடுத்த படம் .அர்ச்சகர் மணிகண்டன் பூஜைகள் செய்தார்.
மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில், நவராத்ரியையொட்டி, காளி அம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.