
அருப்புக்கோட்டை அருகே தனியார் பேருந்து மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை அருகே அழகிய நல்லூரைச் சேர்ந்த குருசாமி மகன் செல்வகுமார் வயது 19 இவரும் இவருடைய தாயார் செல்வியும் மோட்டார் சைக்கிளில் விருதுநகர் சென்று கொண்டிருந்தனர் புளியம்பட்டி அருகே மின்வாரிய அலுவலகம் முன்பாக விருதுநகரில் இருந்து வேம்பார் சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே செல்வகுமாரும் அவரது தாயாரும் பலியாகினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து வருகின்றனர்
செல்வி சத்துணவு பொருப்பாளராக பணிபுரிந்து வருகிறார்





