October 13, 2024, 12:45 PM
32.1 C
Chennai

ஆடி அமாவாசை; வைகைக் கரையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்!

tharpanam in thiruvedagam vaigai river

சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆடி அம்மாவாசை முன்னிட்டு ஏராளமான முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசையை முன்னிட்டு சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில், இறந்த தங்கள் முன்னோர்களின் நினைவாக பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர்.

ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், அரிசி போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும். குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.

அந்த வகையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகையில் தங்கள் முன்னோர்கள் நினைவாக பூஜைகள் செய்து புனித நீராடுவதற்காக அதிகாலையிலே ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்தனர். இங்குள்ள போத்திகள் மற்றும் விற்பனர்கள் மந்திரம் ஓத எள், பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.

இது போன்று இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதால் அவர்களுடைய ஆன்மா நற்கதி அடைந்து, தங்களுக்கு சகல ஐஸ்வரியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதைத்தொடர்ந்துஇங்குள்ள அருள்மிகு ஏடகநாதர் ஏழவார்குழலிசிவன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ALSO READ:  சிவகங்கை: கல்விக் கடன் முகாம்கள் பற்றி ஆட்சியர் தகவல்!

இதே போல் திருவேடகம் சாய்பாபா கோவில் அருகில் உள்ளவைகை ஆற்றில் சோழவந்தான் வைகை ஆற்றில், அணைப்பட்டி வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க மக்கள் குவிந்தனர்.

மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்து மாரியம்மன் ஆலயம்,வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம் ஆகியவற்றில் ஆடி அமாவாசை தர்பணம் நடைபெற்றது.

author avatar
ரவிச்சந்திரன், மதுரை

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா.

செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா. செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு...

பஞ்சாங்கம் அக்.13 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: அக்.13ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...

திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் ரத்து!

திருச்செந்தூர் - திருநெல்வேலி ரயில் அக்.15 முதல் நவ.22ஆம் தேதி வரை (தீபாவளி நாள் தவிர்த்து) ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் களைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்!

கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்துக்களின் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று.